ரஸ்தா காடு கடற்கரையில் சமத்துவ பொங்கல் விழா - விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
நாகர்கோவில், ஜன. 13- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ரஸ்தா காடு கடற்கரையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவில் விஜய்வசந்த் எம். பி. பங்கேற்றார்.
சமத்துவ பொங்கல் விழா
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தா காடு கடற்க ரையில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி செல்வகுமார் தலைமை தாங்கினார்.பால பிரஜாபதி அடிகளார் முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கலை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக ஜெனிட் ஷிப்பிங் நிறுவன தலைவர் டாக்டர் ஜாண்சன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக விஜய்வசந்த் எம்.பி. பேசியபோது, "இது போன்ற ஒரு பொங்கல் விழாவில் தான் என் தந்தை யும், டி ராஜேந்திரனும் ஒன் றாக பங்கேற்றனர். அதே விழாவில் நான் பங்கேற்ப தில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
அன்பை போதிப்போம்
இதைத் தொடர்ந்து பி.டி. செல்வகுமார் பேசிய போது, "கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 11-வது ஆண் டாக இந்த பொங்கல் விழா நடக்கிறது. அன்பை மட்டும் போதிப்போம். அன்பை போதித்தவர்கள் தான் வெற்றி பெற்று உள்ளனர். இந்தியா வின் தொடக்கம் காஷ்மீர் என்று கூறுவார்கள். ஆனால் அப்படி இல்லை. இந்தியா வின் தொடக்கமே குமரி தான். லெமூரியா என்ற ஒரு கண்டம் இங்கு இருந்துள்ளது. இங்கு பிறந்த கலைவாண ருக்கு மணிமண்டபம் கட்ட முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.விழாவில் காணிமடம் தவஸ்வி பொன் காமராஜ் சுவாமி, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத் மேந்திரா, அருட்பணியாளர் ராஜன், மகளிர் மேம்பாட்டா ளர் எமலின் பிளாண்ட்டோ, குமரி மாவட்ட கலப்பை மக் கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், நிர்வாகிக கள் விஸ்வை சந்திரன், ரகு பதி, அஞ்சுகிராமம் பேரூ ராட்சி தலைவி ஜானகி " இளங்கோ. கவுன்சிலர்கள் காமாட்சி, ஜோஸ் திவாகர், ரஜகிருஷ்ணாபுரம் பங்குபேர வைதுணைத்தலைவர் ஜெபர் சன், தொழில் அதிபர் சுதர் சன், கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் டிசாசோ, அகஸ்தீஸ்வரம் வட்டார வர்த்தகர் கங்கிரஸ் தலைவர் ஜெய்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கின்னஸ் குழு வந்தது
விழாவில் பெண்கள் திர ளாக கலந்து கொண்டு 2008 பானைகளில் பொங்கல் வைத்தனர். மேலும் அமெரிக் காவை சேர்ந்த சுற்றுலா பய ணிகளும் பங்கேற்று பொங் கல் வைத்தனர். விழாவில் அபிநய கீதம் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொங்கல் வைத்த அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த பொங்கல் விழாவை பார்வையிட கின்னஸ் குழு வந்தது. திரளான பெண்கள் பொங்கலிட்ட காட்சிகளை கின்னஸ் குழு வீடியோ பதிவு செய்து விட்டு சென்றது குறிப் பிடத்தக்கது.
கின்னஸ் குழுவால் பதிவு செய்யப்பட்ட பொங்கல் விழா - 13-01-2025 தினத் தந்தி செய்தி