
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆரல்வாய்மொழி. ஜன.14-கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் பண்டிகை யையொட்டி ஏழைகளுக்கு ஆடு வழங்கும் நிகழ்ச்சி ஆரல் வாய்மொழி பெருமாள்புரம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் மார் பயனாளிகளுக்கு ஆடுகளையும், கரும்பும் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.
மேலும் நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜி மலர், ஆரல்வாய்மொழி நாடார் மகாஜன சங்கத் தலைவர் சண்முகம், மற்றும் மனோகரன், முருகன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். இதுபோல ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரல்வாய்மொழி மட்டுமல்ல ஆவரைகுளம், சாமிதோப்பு, புத்தளம் போன்ற இடங்களில் பயனாளிகளுக்கு ஆடு களும், 500 பேருக்கு கரும்பும் வழங்கப்பட்டது.
கலப்பை மக்கள் இயக்கத்தின் மக்கள் சேவை குறித்து தினத் தந்தியில் 14-01-2025 அன்று வெளிவந்த செய்தி
Tags:
News